தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜபக்சே தோல்வி அடைந்தது குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டார்.Dr-Swamy

இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து 49 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேன போட்டியிட்டார்.

இதில், ராஜபக்சே தோல்வி அடைந்துள்ளார். தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்கு பகுதியிலும் ஸ்ரீசேனவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல.

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து வெற்றி பெற காரணமாக இருந்த சர்ச்சிலும், இந்தியாவில் அதிசயம் நிகழ்த்திய பிவிஎன் ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

இரண்டாவது உலகப் போரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் சர்ச்சில். பி.வி. நரசிம்மராவ் இந்தியாவில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இவ்வளவு செய்தும் அவர்கள் 2 பேரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

அதேபோன்று, நல்லது செய்தும் ராஜபக்சே தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Comments
Loading...