தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..

போலீஸ் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சிரிஷ். இவர் வில்லா வளாகத்தில் தினமும் ரோந்து சென்று வருகிறார். அப்போது அந்த வில்லாவில் நாயகி சாந்தினியை பார்க்கிறார்.
 இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எழுத்து துறையில் ஆர்வமாக இருக்கும் சாந்தினி, ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்றால் செய்யும் எண்ணம் கொண்டவர்.
இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் சிரிஷ். அவரே வேறொரு போனில், யாரோ ஒருவர் போல் பேசி, நீ சிரிஷுடன் பழக்கக்கூடாது என்று பேச, அவரோ நான் பழகுவேன் என்று கூற, இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சிரிஷுக்கு அவரது குரலிலேயே ஒரு போன் வருகிறது. அதிர்ச்சியடையும் சிரிஷ், அது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கு போது, ஒரு மர்மான முறையில் கொலை நடக்கிறது. இந்த கொலைப்பழி சிரிஷ் மேல் விழுகிறது.

இதிலிருந்து சிரிஷ் தப்பிதாரா? அந்த மர்ம குரல் யார்? கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

யுவனின் இசை படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சிம்பு பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணியிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ ராஜா.
Comments
Loading...