Designed by Iniyas LTD
வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி வேட்டை
இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெறும் வங்காளதேசத்தில் கடந்த ஒரே வாரத்தில் இந்து கோயில் பூசாரி, மட நிர்வாகி, கிறிஸ்தவரான ஒரு வியாபாரி ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு உள்ளூரை சேர்ந்த சில தீவிரவாத குழுக்களும், அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையில் தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி வேட்டைகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
இதன் எதிரொலியாக மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் மூன்று நாட்களாக ராணுவத்தினர் துணையுடன் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 103 தீவிரவாதிகள் உட்பட சந்தேகத்துக்குரிய 8500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தீவிரவாதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் இருந்து பெருகிவரும் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளில் 21 கொலைகளுக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.