தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெறுகின்ற போராட்டங்களின் பின்னனியில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாடினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்தியுள்ளார்.

லண்டன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காணிகள்

மேலும் வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்கள் காணிகள் 80 வீதம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இதனை யாரும் கூறவில்லை என்றும், தமது சுய லாபத்திற்காக மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நாட்டை பிரிக்கும் எந்த ஒரு செயற்பாட்டையும் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும், தமிழீழம் அமைவது சாத்தியமற்றது எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளதாக  மேலும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
Loading...