தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமராட்சியில் கோர விபத்து! இளைஞன் பலி

senpakamவடமராட்சி – யாக்கருச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரவெட்டி, யாக்கரு சந்தியில் நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில்  குடவத்தை துன்னாலையை சேர்ந்த செல்லத்தம்பி செல்வராஜா  (வயது – 28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாக்கரு சந்தியில், சாவகக்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொடிகாமத்தில் இருந்து கலிகை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கியயறியப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன், உயிரிழந்தவருக்கு பின்னால் இருந்து பயணித்த துன்னாலை குடவத்தைச் சேர்ந்த செல்லத்தம்பி செல்வரூபன் (வயது – 18) என்ற இளைஞனும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கரவெட்டி கிழக்கை சேர்ந்த  இராசநாயகம் கோகுலன் (வயது  29) என்ற இளைஞனும் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இரண்டு இளைஞர்களும் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதிவான் சுப்பிரமணியம் விசாரணைகளை நடத்தினர். சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பொருட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Loading...