தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமாகாண ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்…

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன்  மன்னாரில்   கலந்து கொண்ட நிகழ்விலிருந்து ஊடகவியலாளார்களை ஆளுநாின் செயலாளர் ஒருவர் வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்டபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகள் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 
இதில் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள்,மன்னார் ,நானாட்டான்,
முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகியவற்றின் பிரதேசச் செயலாளர் கள், மாவட்டத்தில் உள்ள கிராம அலுவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிரு ந்தது.
 இந்நிலையில் காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் வருகை தருவதாக இருந்த போதும் நீண்ட நேரத்தின் பின்னரே அவரது வருகை அமைந்திருந்த நிலையில்,
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களும் அங்கே சமூகமளித்திருந்தனர்.
அரசாங்க அதிபரின் ஆரம்ப உரை இடம் பெற்ற போது ஆளுனருடன் வருகை தந்த பிரத்தியேக செயலாளர் என கூறப்படுபவர் , ஆளுனரின் பாதுகாப்பு பிரிவினர் ஊடாக ஊடகவியலாளர்களை  வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments
Loading...