Designed by Iniyas LTD
வடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை ஒக்டோபர் 18ம் திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வனிற்கு எப்படியேனும் அமைச்சு பதவி பெற்றுக்கொடுக்க சுமந்திரன் அணி மும்முரமாக உள்ளனர்.
தொடர்புடைய பதிவு
இந்த நிலையில் இன்றைய அமர்வில் முதலமைச்சரிற்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் வழக்கின் நியாயாதிக்க எல்லை தொடர்பில் முதலமைச்சர் தரப்பு எழுப்பிய கேள்வியினையடுத்தே வழக்கு மீண்டும் ஒக்டோபர் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதியுடன் வடமாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.