தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட்டுவாகல் கடல் நீர் ஏரியில் இலட்சக் கணக்கில் மீன்கள் இறந்து கிடக்கின்றன…

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடல் நீர் ஏரியில் உள்ள  மீன்கள் உயிரிழந்து காணப்படுகின்றன

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடல் நீர் ஏரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து மிதந்து காணப்படுகின்றன

வட்டுவாகல் கடல் நீர் ஏரியினை நம்பி வாழ்கின்ற 240  மீனவ குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்

இதேவேளை வட்டுவாகல் கடலினை ஆழப்படுத்தி தருமாறு மீனவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும்  வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதும் அதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் கடந்த இரண்டு நாட்களாக வட்டுவாகல் கடல் நீர் ஏரியில் உள்ள மீன் இனங்கள் உயிரிழந்த நிலையில் மிதந்து காணப்படுகின்றது பாலத்தால் செல்லும் போது துர்நாற்றம் வீசுகின்றது இந்த இறந்த மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியிடம் கேட்டபோது கடந்த ஆண்டும் நீர்வற்றி வறட்சியால் மீன்கள் உயிரிழந்துள்ளன அதேபோல்தான் இந்த ஆண்டும் உயிரிழந்துள்ளது இதுதொடர்பில் கடந்த ஆண்டும் நாரா கடற்தொழில் ஆய்வு நிறுவனம் பரிசோதனை மேற்கொண்டு மீன்களுக்கான ஓட்சிசன் இல்லாத காரணத்தால் மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அதுபோல்தான் இந்த ஆண்டும் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வட்டுவாகல் கடல்நீர் ஏரியினை சுற்றிஉள்ள 250 வரையான மீனவ குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வறட்சி காரணமாக வாழ்வாதாரத்தினையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும்என்றும் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை வட்டுவாகல் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இறந்த மீனினை அப்புறப்படுத்துவதற்கு பிரதேச செயலாளர் ஊடாக பிரதேச சபையினை நாடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்

Comments
Loading...