தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 12 பேரை கைது..

மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 12 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

இததகவலை மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்த 12 பேரினுள் ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும்  அடங்குவதாகவும் அவர்கள்  கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை மின்னேரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வரை தாக்கிவிட்டு சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்ற சம்பவத்தை அடுத்து மின்னேரிய தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நேற்று பிற்பகல் மின்னேரிய தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...