Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் முஸ்லீம் பொலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி…
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லீம் பொலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையின் பின்னணியின் அரசியல் சூழ்ச்சிய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லீம் மக்களை குடியேற்றுவதற்காக முஸ்லீம் அரசியல் தலைமைகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரண்டு முஸ்லீம் பொலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் நியம்க்கப்பட்டமையானது முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லீம்களின் ஆதிகத்தினை நிலைநாட்டும் செயல் எனவும் கருதப்படுகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தினை மையமாக கொண்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றத்தினை மேற்கொள்ள முஸ்லீம் அமைச்சர் ஒருவரினால் மறைமுகமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் இனவீகிதாசராத்தினை குறைக்கும் நோக்கில் அவர்களின் செயற்பாடுகள் அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது பொலீஸ் நிலையம் செல்லத பல முஸ்லீம் மக்கள், தங்கள் இன அதிகாரி நியமனத்தின் பின்னர் பொலீஸ் நிலையங்கள் சென்று வருவதை அவதானிக்க கூடியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.