Designed by Iniyas LTD
விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் (வயது 46) இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனது வீட்டுக்கு இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைதுசெய்து சென்றுள்ளதாக அவரது மனைவியான கயல்விழி, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.