Designed by Iniyas LTD
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ராம் மீண்டும் தடுப்பில்!
ஸ்ரீலங்காவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், ஸ்ரீலங்கா பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கணவன், திருக்கோவில் – தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து, இனந்தெரியாதோரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே ஸ்ரீ பொலிஸாரினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.