தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுவிக்கப்பட்ட மக்களின் காணியைச் சுற்றி கடற்படையினர் அதிரடியாக வேலியமைப்பு- ஆட்சிமாற்றத்தின் எதிரொலியா??..

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணியைச் சுற்றி இலங்கை கடற்படையினர் அதிரடியாக வேலியமைத்துள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் குடியிருப்பில் மக்கள் மீளக்குடியேறியுள்ள நிலையில் அங்குள்ள கடற்படையினர் மீளவும் தமது பழைய நிலைகளை   சுற்றி வேலியை அமைத்துள்ளதாக தெருயவந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதி  உள்ளே இருக்கிற மக்கள் வெளியே வரமுடியாத நிலையும் வெளியே உள்ள மக்கள் உள்ளே செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்  நிலையில் அன்ங்ள்ள  மாணவர்கள் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை  கடற்படையினர் இந்த செயலில்  ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...