தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெயிலின் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு….

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கடும் வறட்சி  நிலவி வருகின்றது.

வறசியின் காரணமாக  வெயிலின் தாக்கத்துடன் கடும் வெப்பக் காற்று வீசுவதால் நீர் சத்து குறைவான மக்கள் ஆயிரக்கணக்கானோர் போது இடங்களில் மயங்கி விழுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது .

இதில் பலர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலயில் ,உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் டோக்கியோ நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் பாய்ச்சி  வெப்பத்தை தணிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை  பல நாடுகளில் இருந்து  அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...