தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெலிக்கடை சிறை வி.ஐ.பி பிரிவு அவசரமாக புனரமைப்பு!

indexகொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையின் முக்கிய பிரமுகர் பிரிவு அவசரமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல கலைஞரும் அரசியல்வாதியுமான விஜயகுமாரதுங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ் பிரிவு அவசரமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கைதாகியபோது இந்தப் பகுதியில் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முக்கிய பிரமுகர் ஒருவர் விரைவில் சிறையில் அடைக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதனால் இவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலையின் ‘எஸ்’ பிரிவு புனரமைக்கப்படுகின்றது என சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த முக்கிய பிரமுகர் பிரிவு ஏற்கனவே புனரமைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உப்புல் தெனிய தெரிவித்தார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையின் விளக்கமறியல் பிரிவில் மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...