Designed by Iniyas LTD
வெலிக்கடை சிறையில் பெண் கைதிகள் மதுபான விருந்துடன் கொண்டாட்டம்!
வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில், இடம்பெற்ற மதுபான விருந்து தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மதுபான விருந்து, கடந்த வௌ்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து, பெண்கள் சிறைக்கூடத்தை சோதனை செய்தபோது, அங்கிருந்து வெற்று மதுபான போத்தல்கள் மற்றும் அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வெற்று போத்தல்களில் மதுபானத்தை நிரப்பி மதிலுக்கு மேலாக சிறைச்சாலைக்குள் வீசப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மதுபானம் அருந்திய பெண்கள், போதையில் நடனமாடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.