தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ளநிவாரணம் கிடைக்காததல் முற்றுகை போராட்டம் நடத்திய நரிக்குறவர்கள்

சென்னையை அடுத்த பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு 7–வது வார்டில் நரிக்குறவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் சமீபத்தில் பெய்த பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.avl

எனினும் அரசு வழங்கிய வெள்ள நிவாரணம் இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று ஆலந்தூரில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து தாலுகா அலுவலகத்தில் தான் கேட்க வேண்டும் என மண்டல அலுவலக அதிகாரிகள் கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் நங்கநல்லூரில் உள்ள ஆலந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் 30–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெள்ள நிவாரணம் கேட்டு உரிய மனு தந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து மனு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி, முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments
Loading...