தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்…

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அங்குள்ள  பலுவை நகரை  சுனாமி தாக்கியது.
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது.
இந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் உயிரிழதனர். மேலும் 5000க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில்   மீண்டும்  ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று  ரிக்டர் அளவில் 6.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக  பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...