தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கட்சி பதவிகளுக்கு எல்லாம் ஆசைப்படுபவன் நான் அல்ல – முக ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், கட்சி பதவிகளுக்கு எல்லாம் ஆசைப்படுபவன் நான் அல்ல என்று தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகளை அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.02stalin1

இந்த சந்திப்பின்போது இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்கள் என்று அனைவரையும் தனித்தனியே சந்தித்து உரையாடியுள்ளார்.

அப்போது பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசுகையில், கட்சி பதவிகளுக்கு எல்லாம் நான் ஆசைப்படுவது இல்லை. நான் கட்சியில் ஒழுக்கமானவன் என்று தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளதே எனக்கு பெருமை.

திமுகவை துவங்கியதும் அது ஆட்சிக்கு வந்துவிடவில்லை, கட்சி பல சோதனைகளை சந்தித்துள்ளது. கிளைக்கழகத்தின் பணிகள் குறித்து உங்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்.

மேலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் கட்சி திமுக என்றும், வரும் 2016ம் ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...