தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போனவர்கள் அனைவரும் புலிப்போராளிகலாம்!

Ghotabaya 1.jpgயுத்­தத்தின் பின்னர் எவரும் காணா­மல்­போ­க­வில்லை. வடக்கில் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து ஒவ்­வொரு குடும்­பத்­தி­ன­ருக்கும் தெரியும். விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுத போராட்­டத்தில் தமது உற­வினர் இணைந்­து­கொண்­டனர் என்­பதும் அவர்­க­ளுக்கு தெரியும். காணா­மல்­போ­ன­தாக கூறப்­படும் அனை­வரும் விடு­த­லைப்­பு­லி கள் இயக்­கத்தின் போரா­ளி­க­ளேயாவர். ஆகவே அவர்கள் அப்­போ­தைய போர்க்­க­ளத்­தி­லேயே இறந்­து­விட்­டனர் என்று கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

எம்மை வைத்து புதிய அத்­தி­யாயம் ஒன்றை உரு­வாக்க இந்த அர­சாங்­கமும், சர்­வ­தேச தரப்பும் முயற்­சிக்­கின்­றது. பொய்­யான கதைகள், காரணம் இல்­லாத குற்­றச்­சாட்­டுகள், ஆதாரம் இல்­லாத உண்­மை­களை வைத்து சர்­வ­தேச பிர­தி­நி­தித்­துவம் பொய்­யான வர­லாற்றை எழு­தப்­பார்க்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

காணா­மல்­போனோர் மற்றும் இரா­ணு­வத்­தினால் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்பில் உண்மை நிலைமை என்­ன­வென வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

இந்த கால­கட்­டத்தில் நான் மிகுந்த வேலைப்­ப­ழு­விற்கு மத்­தியில் செயற்­பட்டு வரு­கின்றேன். நிதி­மோ­சடி விசா­ரணை பிரி­வினர் இப்­போ­தெல்லாம் என்னை அதி­க­மாக எதிர்ப்­பார்க்­கின்­றனர். செய்­யாத குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். எனினும் நான் சட்­டத்­தையும் அர­சாங்­கத்­தையும் மதித்­தது அவர்­களின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்றேன்.

எனினும் அர­சி­யலில் காலடி எடுத்து வைப்­பது தொடர்பில் நான் இன்னும் முடி­வு­களை எடுக்­க­வில்லை. நான் இன்னும் இரா­ணுவ அதி­காரி என்ற நிலைப்­பாட்டில் தான் இருந்து வரு­கின்றேன். யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து இந்த நாட்டை மீட்­டெ­டுப்­பதில் அதிக காலத்தை செல­வ­ழித்தேன்.

அதேபோல் யுத்­தத்தின் பின்­னரும் பாது­காப்பு செய­லா­ள­ராக என்னை தயார்ப்­ப­டுத்தி நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் நாட்டின் பாது­காப்பு விட­யங்­களில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டேன். எனினும் அந்த வேளை­யிலும் சரி அல்­லது இப்­போதும் சரி நான் அர­சி­யலில் என்னை இணைத்­துக்­கொள்ள விரும்­ப­வில்லை.

நான் அர­சியல் பின்­புலம் உள்ள குடும்­பத்தில் இருந்து வந்­தவன். எனது தந்தை, சகோ­த­ரர்கள் என அனை­வரும் அர­சியல் கலா­சாரம் தெரிந்­த­வர்கள். ஆனால் எனக்கு அந்த கலா­சாரம் தெரி­ய­வில்லை. இனியும் அதைப்­பற்­றிய சிந்­தனை எனக்கு இன்னும் வர­வில்லை.

கேள்வி:-நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்பில் உங்­களின் கருத்து என்ன ?

பதில்:- இந்த நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்பில் என்­னிடம் நல்ல அபிப்­பி­ராயம் எதுவும் இல்லை. இந்த அர­சாங்கம் அமைந்­த­வுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி பால சிறி­சேன மக்­க­ளுக்கு பல வாக்­கு­று­தி­களை கொடுத்தார்.

ஆனால் அவர் கொடுத்த வாக்­கு­று­தி­களை இன்­று­வ­ரையில் அவரால் நிறை­வேற்ற முடி­ய­வில்லை என்­பது தெளி­வாக தெரி­கின்­றது. அதேபோல் இப்­போது அமைந்­துள்ள அர­சாங்கம் ஒரு கொள்கை உள்ள ஒரு அர­சியல் கட்­சியின் நிலைப்­பாட்டில் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளி­யே­றி­ய­வர்கள் பொது­வாக ஒரு கூட்­ட­ணியை அமைத்து அதில் இணைந்து கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி இறு­தியில் தெளி­வான ஒரு கொள்கை இல்­லாத அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளனர். இதில் நாட்­டுக்கோ அல்­லது மக்­க­ளுக்கோ எந்த பயனும் இல்லை.

கேள்வி :- அரங்­கத்தின் பாதை ஜன­நாயம் சார்ந்­த­தாக இல்லை என்பது உங்­களின் கருத்தா?

பதில்:- மஹிந்த ராஜபக் ஷ செய்­யாத விட­யங்­களை இந்த நல்­லாட்சி அர­சாங்கம் செய்­து­காட்டும் என்று சவால் விடுத்­தார்கள். ஆனால் நாம் செய்­யாத எதை இந்த அர­சாங்கம் செய்­துள்­ளது என்று எமக்குத் தெரி­ய­வில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்­றாகத் தெரி­கின்­றது. நாம் கட்­டிக்­காத்த நாட்டை மீண்டும் புலி­களின் கைகளில் ஒப்­ப­டைக்கும் ஒரு வேலைத்­திட்­டத்தை மட்டும் இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியில் புலி­களின் கரங்­களே பல­ம­டைந்­துள்­ளது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது வடக்கு மாகாணம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக முழு­மை­யாக தமது வாக்­கு­களை வழங்­கி­யது. இந்த செயற்­பாடும் மஹிந்­தவை முழு­மை­யாக நிரா­க­ரித்து புலி­களின் கரங்­களை பலப்­ப­டுத்தும் ஒரு செயற்­பா­டா­கவே அமைந்­தது. பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட போதும் மீண்டும் பிர­பா­க­ரனை உரு­வாக்கும் முயற்­சிகள் இன்றும் வட­மா­கா­ணத்தில் முன்­னெ­டுக்கப்பட்டு வரு­கின்­றது.

கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிரி­வி­னை­வாத போக்கில் செயற்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்­லையே?

பதில்:- இன்று நல்­லாட்சி ஜன­நா­யகம் பற்­றிய கதை­களை கூறி­னாலும் அவர்­களின் பயணம் புலி­களின் பய­ண­மா­கவே அமையும். நாட்டை துண்­டாடி அதன் மூல­மாக தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் ஒரு செயற்­பாடு மட்­டுமே இதில் உள்­ளது. அவர்­களின் பாதையை மாற்­றி­ய­மைக்க முடி­யாது. அதேபோல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு­போதும் அவர்­களின் கொள்­கை­யையோ பிரி­வி­னை­வாத பய­ணத்­தையோ மாற்­றிக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அவர்கள் இன்றும் சர்­வ­தேச விசா­ர­ணைகள் , புலி­களை நட்­டினுள் மீண்டும் தலை­தூக்க வைப்­பது என்ற செயற்­பா­டு­களில் தான் அதிக அக்­க­றை­காட்டி வரு­கின்­றனர்.

கேள்வி :- காணா­மல்­போனோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்பில் முன்­னைய அர­சாங்­கத்தின் மீதும் பாது­காப்பு படை­யினர் மீதும் பல­மான விமர்­சனம் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- இன்று காணா­மல்­போனோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் என்ற கதை­களை கூறிக்­கொண்­டுள்­ளனர். ஆனால் யுத்­தத்தின் பின்னர் எவரும் காணா­மல்­போ­க­வில்லை என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். வடக்கில் ஒவ்­வொரு பெற்­றோ­ருக்கும் தெரியும் தமது பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது. ஒவ்­வொரு குடும்­பத்­தி­ன­ருக்கும் தெரியும் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது. விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுத போராட்­டத்தில் தமது உற­வுகள் இணைந்­து­கொண்­டனர் என்­பதும் அவர்­க­ளுக்கு தெரியும். ஆனாலும் இதனை அவர்கள் நன்­றாக தெரிந்­து­கொண்டும் இன்றும் தமது உற­வுகள் காணாமல் போன­தாக கூறிகொண்­டுள்­ளனர். காணா­மல்­போ­ன­தாக கூறப்­படும் அனை­வரும் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் போரா­ளி­க­ளேயாவர்.

ஆகவே அவர்கள் அப்­போ­தைய போர்க்­க­ளத்­தி­லேயே இறந்­து­விட்­டனர். யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட போது எவ­ரையும் கைது­செய்­யவோ கடத்­தவோ அல்­லது வதை­மு­காம்­களில் அடைத்­து­வைக்­கவோ இல்லை என்­பதே உண்­மை­யாகும்.

மொத்­த­மாக அக­தி­யா­ன­வர்­களின் எண்­ணிக்­களை மற்றும் வெளி­நா­டு­களில் இன்றும் வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கையை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல்போனதாக கூறப்படும் பலர் இன்று சர்வதேச மட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும், சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது. பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகமும் சர்வதேச பிரதிநிதித்துவமும் பொய்யான வரலாற்றை எழுதப்பார்க்கின்றனர். இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களும் அவ்வாறே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Comments
Loading...