Designed by Iniyas LTD
சர்வதேசமும் புலம்பெயர் உறவுகளும் தமக்காக குரல்கொடுக்குமாறு கேப்பாபிலவு மக்கள் கோரிக்கை…
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தைக்கோரி 687 வது நாளான நேற்று தமது காணியை விடச்சொல்லி கேப்பாப்புலவு இராணுவமுகாமின் வாசலுக்கு முன்னதாக போராட்டம் நடத்தினார்கள்.
மக்கள் பூர்வீக நிலத்தைவிடக்கோரி நடத்தும்போராட்டத்தை நிறுத்தும் நோக்கோடும் இராணுவத்தினருக்கு உதவும் நோக்கோடும்,
ஸ்ரீலங்கா பொலீஷார். இராணுவமுகாமிற்கு முன்னால் போராட்டம் செய்யக்கூடாது எனக்கூறி போராட்டம் செய்த மக்களை விரட்டி பழைய போராட்டக்கொட்டகைக்கு போகுமாறு கூறியுள்ளனர்.
மக்கள் நாம் இவ்விடத்தில்தான் இருப்போம் என்று சொல்ல அதன்பின் பொலீஷார் நீதிமன்ற தடை உத்தரவு எடுத்துவந்து இராணுவமுகாமிற்கு முன்னால் போராட்டம் செய்யமுடியாது எனக்காட்டி மக்களை விரட்டியுள்ளனர்.
அதன்பின்னர் பொலிஸார் இராணுவ முகாம் வாசலில் இருந்து 75 மீற்றர் தூரத்திற்கப்பால் சென்று போராட்டம் செய்யும்படி கூறி தூர இடைவெளியை அளவு நாடாமூலம் அளந்து விட்டுள்ளார்கள்.
இது இவ்வாறிருக்க இரவு மக்கள் போராட்ட இடத்தில் இருந்தபோது இராணுவமுகாமின் வளாகத்திலும்.வீதியிலும் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்பட்டது. அதன் பின் போராட்டமக்கள் குப்பி விளக்கின் உதவியுடன் இரவு வேளையை கழித்துள்ளனர்.
நேற்றய தினம் சனிக்கிழமை நீதிமன்ற செயற்பாடுகள் எதுவும் வெளிப்பகுதியில் இல்லை ஆனால் பொலீஷார் இராணுவத்திற்கு சார்பாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எது எப்படியிருந்தாலும் எமது நிலம் விடும்வரை நாம் இப்பஇருக்கும் இடத்திலிருந்து போராடுவோம் என்றும் ,
சர்வதேசமும் புலம்பெயர் உறவுகளும் இந்த உண்மைகளை உணர்ந்து குரல்கொடுத்து எமது காணியை மீட்க உதவவேண்டும் எனவும் கேப்பாப்புலவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.