Designed by Iniyas LTD
தமிழக மீனவர்களை மீட்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை: பொன்.ராதாகிருஷ்ணன்
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை நோக்கி செல்லும்போது இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் மத்திய அரசின் முயற்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.