தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பில் சடலங்களைப் புதைத்தது புலிகளாம்! – சிறீலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவிப்பு..

mannar grave

புதுக்குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதபுதைகுழி எச்சங்கள் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டவை அவை தான் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி விடுதலைப் புலிகள் குறித்த இடத்தில் சிலரது சடலங்களை புதைத்ததாக குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்த கோடீஸ்வரன் தெரிவித்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உழவூர்தி ஒன்றின் மூலம் சடலங்கள் கொண்டு வரப்பட்டு அங்கு புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...