தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெற்றோர் மாணவர்கள் எதிர்ப்பை மீறி திருமலை ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி திருகோணமலை ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு

திருகோணமலை ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலய அதிபரின் இடமாற்றத்தினை தடுத்து நிறுத்துமாறு கோரி மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து கடந்த 12.06.2015 ஆம் திகதி பாடசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

allam

குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வலயக்கல்விப் பணிப்பாளர் இப்பாடசாலையின் அதிபரான திரு.மு.மோகனேந்திரன் அவர்களை இடமாற்றம் செய்யாது தொடர்ந்தும் இப்பாடசாலையிலேயே கடமையாற்றுவதற்கு தேவையான ஒழுங்குகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டிருந்தனர்.

ஆனால் பெற்றோர்கள் மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி திருகோணமலை ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம் செய்யப்பட்டு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் புதிய அதிபர் கடமைக்கு சமூகமளித்துள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் அப்பாடசாலைக்கு சமூகமளிக்காது தங்களது எதிர்ப்பினை தொடர்ந்து வெளிக்காட்டி வருவதுடன் தொடர்ந்தும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பாடசாலைச் சூழலில் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் புதிய அதிபருக்கு எதிர்ப்பினைக் காட்டுகின்ற பெற்றோர்களை அதிபருக்கு ஆதரவான ஒரு சில பெற்றார் பொலிசாரின் உதவியுடன் அச்சுறுத்துவதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் புதிய அதிபரான திரு பா.தியாகராசா என்பவர் முன்னர் கடமையாற்றிய பாடசாலையில்  ஏதோ ஒரு தவறு இழைத்ததற்கான தண்டனை இடமாற்றவாகவேதான் இப்பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளதாகவும் அத்துடன் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணிக்கும் புதிய அதிபருக்கும் உள்ள நெருங்கிய உறவு காரணமாகத்தான் ஏதோ ஒரு நன்றிக்கடனா இந்த இடமாற்றத்தினை பெற்றோர்கள் மாணவர்களது எதிர்ப்பினையும் மீறி அமைச்சர் மேற்கொண்டதாக பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...