Designed by Iniyas LTD
மாட்டிறைச்சி அரசியல் : ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவைக்கு தடை
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி அரசியல் விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இம்மாநிலத்தில், மாட்டிறைச்சி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில், இணையதள சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாட்டிறைச்சி விவகாரத்தில், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்ப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற ஜம்மு கிளையின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாதங்களுக்கு தளர்த்தியது.