தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லண்டனில் இடம்பெற்ற மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு தை 2019…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்  வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு , மகளிர் படையணியின் முதன்மைப் பொறுப்பாளர் மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ், மாமனிதர் குமார் பொன்னம்பலம் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும்,

இதுவரை காலமும் அன்னிய சிறீலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட  அனைத்து மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில்,

வழமைபோல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் (OX17 3NX)  நேற்றுமாலை (27/01/2019 ) 2:00 மணிக்கு நடைபெற்றது..

இந்த நினைவு வணக்க நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு  எம்மினத்தின் விடுதலைக்காக உயிர்கொடுந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளனர்.

 

Comments
Loading...