தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஸ்வமடுவில் யானை வேலி அமைக்க 5 மில்லியன் பணம் தருவதாக ஜனாதிபதி உறுதி.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட விஸ்வமடு பிரதேசத்தில் காட்டு யானைகளால் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுப்பதாக மக்கள் பல்வேறு தடவைகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததோடு , ஊடகங்களிலும் இந்த பிரச்சனை பல்வேறு தடவைகள் வெளிக்கொண்டுவரப்பட்டும் தீர்வு கிடைக்காது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்

இந்நிலையில் கடந்த 16.06.2018 அன்று விஸ்வமடு அட்டைக்குளம் சுற்றுலாதளம் திறந்து வைக்க சென்ற முதலமைச்சரிடம் தமது குறைகளை நேரடியாக தெரிவித்தனர்.

இதன்போது முதலமைச்சருக்கு தமது ஊருக்குள் வருவது காட்டு யானைக்கள் அல்ல இங்கு தென்பகுதியில் இருந்து கொண்டுவந்து விட்ட யானைகள் அவை கலைத்தாலும் செல்கின்றன அல்ல யானை வேலி அமைப்பதே அதற்க்கு தீர்வு எனவும் நிதியை நாம் மக்களிடம் பிச்சை எடுத்து என்றாலும் சேகரிக்கிறோம் வேலி அமைப்பதக்கு தடையாக உள்ள வனவள பாதுகாப்பு பிரிவு உள்ளிட்டவர்களின் அனுமதிகளை பெற்று தருமாறு கூறினார்

இதன்போது முதலமைச்சர் அவர்களுக்கு தங்களால் முடியுமானவரை இதனை செய்துதர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றார்

இந்நிலையில் இன்று சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்ட மாகாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்த ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடியபோது அதற்க்கு தேவையான 5 மில்லியன் நிதியினை தருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள்ளார் என முதலமைச்சர் தனது உரையில் கூறியபோது ஜனாதிபதி அந்த நிதியை நாளைக்கே தருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

இதன்மூலம் விஸ்வமடு மக்களிக்கு யானைவேலிஅமைத்து கொடுக்கப்படவுள்ளது

Comments
Loading...