தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அடிபுடியில் ஈடுபட்ட எம்பிக்களிடம் விசாரணை

டெல்லி விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, சசிகலா புஷ்பா, திருச்சி சிவா கன்னத்தில் அறைந்ததாகவும் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் செய்திகள் பரவின.   இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த திருச்சி சிவா, “சசிகலா புஷ்பா காரணம் இன்றி திடீரென சட்டையை பிடித்து இழுத்து என்னை தாக்கினார்” என்றார்.  att

சசிகலா புஷ்பா கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சி பற்றியும், ஜெயலலிதா பற்றியும் திருச்சி சிவா தவறாக விமர்சித்ததால் அவரது கன்னத்தில் அறைந்தேன்” என்றார்.  இந்த நிலையில், அ.தி.மு.க – தி.மு.க. எம்.பி.க்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை அவர்களது கட்சி தலைமை அழைத்து விசாரணை நடத்தியது. ஜெயலலிதாவை, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மதியம் 2.30 மணிக்கு சசிகலா புஷ்பா எம்.பி. சந்தித்தார். அப்போது, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடன் இருந்தார். மாலை 5.15 மணி வரை அங்கிருந்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அப்போது, ஜெயலலிதா அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், தி.மு.க. தலைவர் கலைஞரை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி சிவா எம்.பி. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு சந்தித்து பேசினார். அப்போது, டெல்லி விமான நிலையத்தில் நடந்த பிரச்சனையை முழுமையாக அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.   கைகலப்பில் ஈடுபட்ட 2 எம்.பி.க்களையும் அழைத்து நேற்று கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments
Loading...