தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் – ஜிகே.வாசன்

உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது த.மா.கா. கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில், தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.  கூட்டத்தில் கட்சியின் மூத்த துணை தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவை தங்கம், பொதுச் செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  GK Vasan

முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-  மத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதில் ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் கொள்கையை திணிக்கக் கூடாது.  அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு புதிய கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்படும் கல்விக் கொள்கை, எந்த மாநில கல்விக் கொள்கையிலும் தலையிடுவதாக இருக்க கூடாது.  இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து தலித்துகள் தாக்கப்படும் சம்பவங்கள் ஏற்படுவது கண்டிக்கத்தக்கது.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உரிய அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  த.மா.கா.வை பொறுத்தவரை, உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...