தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிநவீன பாரக் 8 ஏவுகணை பரிசோதனை வெற்றி!

barak8ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதியான பலசோர் அருகிலுள்ள சாந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன ரக ஏவுகணையான ‘பாரக் 8’ -ன் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது.

இதுகுறித்து இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியிருப்பதாவது: -இஸ்ரேல் – இந்தியா இருநாட்டு கூட்டு தயாரிப்பில், நிலத்தில் இருந்து விண்ணில் பாய்ந்து நெடுந்தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்  ‘பாரக் 8’ ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

திட்டமிட்ட இலக்குகளை தாக்கி அழிப்பதுடன், தன்னை தாக்க வரும் பிற பொருட்களையும் மோப்பம் பிடிக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணைகள் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் திறன் மிக்கதாகும்.

ஏற்கெனவே, இதேபோன்று இந்தியா – இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான எம்ஆர் – சாம் ரக ஏவுகணைகளின் பரிசோதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்தும் நடுத்தர ரக ஏவுகணைகளாகும். தற்போது பரிசோதிக்கப்பட்ட ஏவுகணையானது, கூடுதல் தொலைவில் உள்ள இலக்குகளையும் வீழ்த்தும் திறன் கொண்டது. இந்த வகை ஏவுகணைகளின் செயல்பாடுகள், செல்லும் தடங்கள் உள்ளிட்டவற்றை தரையிலிருந்தபடி கண்காணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்

இதற்கு முன்னதாக இஸ்ரேல் கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து இதன் முதல் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...