தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல்வாதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி கேமரா திருட்டு – மட்டக்களப்பில் சம்பவம்..

மட்டக்களப்பு கல்லடிப் பகுதியி;ல்  வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 2 சீசீரிவி காணொளிக் கமெராக்கள் திருடப்பட்டதோடு  மேலும் ஒன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிகப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம்  அரசியல்வாதியான பெண்ணொருவர் வீடில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கல்லடி முதலாம் குறுக்கை அண்டி வசிக்கும் லோஜினி மகேந்திரா என்பவரின் வீட்டிலேயே திங்கட்கிழமை 07.01.2019 அதிகாலை 3.20 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டை நோட்டமிட்டபடி பிரதான நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சீசீரீவி கமெராக்களில் இரண்டு அகற்றப்பட்டிருப்பதாகவும் மேலும் ஒரு கமெரா இயங்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சேதமாக்கப்பட்ட கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அவதானித்த பொழுது குற்றச் செயல் புரிந்தவரின் நடமாட்டமும் தோற்றமும் தெரிவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
Loading...