தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறோம்: பசில்

mahinda rajapaksa basil rajapaksa_CI

அரசியல் ரீதியாக தாம் பழிவாங்கப்படுவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீதிமன்றங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியனவற்றுக்கு அடிக்க செல்ல நேரிட்டுள்ளதாக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் மக்களின் பக்கத்திலிருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

உழைக்கும் மக்கள் மீது அரசாங்கம் பல்வேறு வழிகளில் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் மே தினமன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்றை நடாத்த உத்தேசித்துள்ளதாக பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Comments
Loading...