தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள்கள் அவகாசம்: நபம் துகி

nabamஅருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு குறைந்தது 10 நாள்களாவது கால அவகாசம் வேண்டும் என்று அந்த மாநில ஆளுநரை முதல்வர் நபம் துகி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பான வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கலிகோ ஃபுல் தலைமையிலான அருணாசலப் பிரதேச அரசு சட்ட விரோதமானது என்று அறிவித்தது. மேலும், நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசை மீண்டும் ஏற்படுத்தியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்த மாநில முதல்வரான நபம் துகியிடம் சனிக்கிழமையன்று (ஜூலை 16) சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி ஆளுநர் ததகத ராய் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இடாநகரில் ஆளுநர் ததகத ராயை முதல்வர் நபம் துகி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் 10 நாள்களாவது எனக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.  அதற்கு சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தும், அரசு தலைமை வழக்குரைஞருடன் கலந்து பேசியும் முடிவெடுப்பதாக ஆளுநர் பதிலளித்துள்ளார்.

Comments
Loading...