Designed by Iniyas LTD
மறைந்த கலிக்கோ புல் எழுதிய 4 கையேடுகள் சிக்கின
அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவுமான கலிக்கோ புல் (47) தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய 4 கையேடுகள் கைப்பற்றப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4 கையேடுகளும் அவர் இறப்பதற்கு முன்பு எழுதியவை, அவற்றை நாங்கள் படித்துப் பார்க்கவில்லை. எனினும், அது தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதமாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். அவர் தங்கியிருந்த அறையில், அவரது நாட்குறிப்பு கிடைக்கப்பெறவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கலிக்கோவின் மரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி டாலோ போடோம் தெரிவித்துள்ளார்.
தலா 60 பக்கங்களைக் கொண்ட 4 கையேடுகளில் ‘மேரே விசார்’ (எனது சிந்தனைகள்) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், கலிக்கோ கையெழுத்திட்டுள்ளார். அதனை சீல் வைத்து மூடி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.