தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆதரவு கேட்காமலே அதிமுகவுக்கு பல கட்சிகள் ஆதரவு

வரும் சட்ட மன்றத் தேர்தலில், ஆதரவு கேட்காமலே அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் தானே முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டும் என அதிமுக தலைமை இதுவரை அறிவிக்கவில்லை.admk

ஆனால், அதிமுக அவ்வாறு அறிவிக்கும் முன்பே, பல்வேறு கட்சிகள் அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தானே முன் வந்து அளித்து வருகிறது.   அந்த வகையில், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் பஷீர் அகமது தலைமையும், தேசிய தலைவர் முகமது சுலைமான் முன்னிலையும் வகித்தனர். அப்போது, இந்திய தேசிய லீக் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments
Loading...