தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுக வேட்பாளர் யார்? – விளக்கம் அளித்தார் ஸ்டாலின்

திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகபொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.stalin

கருணாநிதிதான் முதல்வர் என்றும், இல்லை இல்லை மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் திமுகவில் பெரும் பட்டிமன்றமே நடைபெறுகிறது.   இந்த நிலையில்,  நமக்கு நாமே பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில், ஜ‌வுளி வியாபாரிகளை திமுக பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது, வரும் சட்ட மன்றத் தேர்தலில், இலவசங்கள் குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்றார்.   மேலும், திமுகவில், முதல்வர் வேட்பாளர் குறித்து திமுக தலைவர் கருணாநிதிதான் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் வரும் சட்ட மன்றத் தேர்தலில், திமுக வெல்லும்பட்சத்தில், கருணாநிதியே முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...