தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவை பெற வைகோ முடிவு

மக்கள் நலக்கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவை பெற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முடிவு செய்தார்.  இதற்காக அவர் இன்று காலை சென்னை தியாகராய நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.  vai

வைகோவை ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் வசீகரன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். வசீகரனுடன் வைகோ சுமார் 1 மணி நேரம் பேசினார்.  இதற்கிடையே கட்சி அலுவலகத்தில் வைகோ வந்துள்ள செய்தி அறிந்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியினர் தலைமை கழக பேச்சாளரும், தன்னார்வ தொண்டருமான தங்கசேகர், கிருஷ்ணவேணி, கிருஷ்ணமூர்த்தி உள்பட சிலர் கட்சி அலுவலகம் முன்பு நின்று வைகோவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.  மக்கள் நலக் கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க கூடாது என்று எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர்.  இது பற்றி அவர்கள் கூறியதாவது:–  ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே ஊழல் செய்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது. அங்குள்ள கம்யூனிஸ்டு கட்சிகளும் ஊழலுக்கு துணைபோனவர்கள். அவர்கள் இப்போது கூட்டணி அமைத்தால் மட்டும் நல்லவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  ஆம் ஆத்மி கட்சி நேர்மையானது. ஊழலுக்கு எதிரானது. எனவே மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிக்க கூடாது. தனித்தே தேர்தலை சந்திக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Comments
Loading...