தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தற்கொலை அங்கி தொடர்பாக பீரிஸிடம் விசாரணை!

GL_CIசாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ‘பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்’ என்றார். 

கைதானவரிடம் விசாரிப்பதற்கு முன்னதாகவே வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்படவிருந்த பொருட்கள் என பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...