Designed by Iniyas LTD
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. இதில் 50 பேர் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 3ம் தேதி தொடங்கிய இந்த வேட்பு மனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிட 50 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததாகவும், அதில் 5 வேட்பாளர்கள், தங்களின் பேரில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி சவுரிராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடைசி நாளான இன்று மட்டும் 15 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களாக அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வரும் ஜூன் 13ம் தேதி மதியம் 3 மணிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். இதனையடுத்து ஜூன் 13ம் தேதி பிற்பகலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் 84 பறக்கும் படைகள் மற்றும் ஆறு நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.