தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

20வது திருத்தச்சட்டத்தை எதிர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 20வது திருத்தச்சட்டத்தை எதிர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றுக்காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.tna

தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், ஜனா ஆகியோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இரா. சும்பந்தன் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

இதன்போது இந்த புதிய திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு எத்தனை எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை இந்தக் கூட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் நடைபெற்ற போது ஐதேக முன்வைத்துள்ள புதிய தேர்தல் முறை யோசனையை எதிர்ப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Comments
Loading...