Designed by Iniyas LTD
ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2 ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கோவாவில் குறித்த கப்பல் நிர்மாணிக்கப்பட்டிருந்தது
கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் பிரிவில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடற்படையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
கப்பலின் கட்டளை தளபதி கப்டன் சமன் பெரேராவிடம் இந்த கப்பல் கையளிக்கப்பட்டது. கடற்படை சம்பிரதாய நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றன.
நவீன வசதிகளை கொண்ட இந்த கப்பலின் நீளம் 107.5 மீற்றர் என்பதுடன் அகலம் 13.6 மீற்றராகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


