Designed by Iniyas LTD
இணைய தள சம வாய்ப்பு குறித்த விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது
இணைய தள சம வாய்ப்பு குறித்த விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது. குறிப்பிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய ட்ராயின் ஆய்வறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
குறிப்பிட்ட இணைய தளங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, மற்றவற்றுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு ட்ராய் துணை போக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜேஷ் தெரிவித்தார்.
இணைய தள சம வாய்ப்பை பாதிக்கும் வகையில் சில நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டு சேர முயற்சிப்பதற்காகவும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற முயற்சியை எதிர்த்து ட்ராய்க்கு பல லட்சம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதை உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர்.
இதுதொடர்பாக விரிவான விவாதம் தேவை என்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்த மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், முன்கூட்டி கடிதம் அளித்தால் அரை மணி நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தார்.