Designed by Iniyas LTD
இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ஊடுருவவுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ஊடுருவவுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உத் தாவா லஷ்கர்-இ-தொய்பா ஜாய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது.
இந்த தீவிரவாத இயக்கங்கள் மகாராஷ்ட்டிரா ராஜஸ்தான் உத்தரபிரதேசம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது. மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து விநாயகர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.