தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் நிதி நிறுவன முதலீடு மோசடிகளை தடுக்க செபி திட்டமிட்டுள்ளது

இந்தியாவில் நிதி நிறுவன மற்றும் முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க பங்குச் சந்தை வழிகாட்டு அமைப்பான செபி திட்டமிட்டுள்ளது.sebi

முறையான நிதிச் சேவை திட்டங்கள் பற்றியும் மோசடி திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள செபி முடிவு செய்துள்ளது. குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவது உள்ளிட்ட மோசடி திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கவும் செபி திட்டமிட்டுள்ளது.

இந்த தகவல்களை ஆக்கபூர்வமான வகையில் மக்களிடம் கொண்டு செல்ல தொழில்முறை விளம்பர நிறுவனங்களின் சேவையையும் செபி பெற்றுள்ளது.

தமிழ் உள்ளிட்ட13 மாநில மொழிகளில் தொலைக்காட்சி, பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிதி மோசடிகள் அதிகம் நடக்கும் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Comments
Loading...