Designed by Iniyas LTD
இனம் -மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை கட்டாயம் தடை செய்யவேண்டும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை கட்டாயம் தடை செய்யவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை குழப்பகரமான நிலைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் கடும்போக்குவாத குழுக்களை தடை செய்வதில் அதிகாரிகள் தைரியத்துடன் செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கடும்போக்குவாத குழுக்கள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட பேராயர், மக்கள் ஐக்கியமாக இருப்பதை அவர்கள் விருப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பழைமையான பத்திரிகையின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி கொண்டாடங்களில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள என்ற கருத்தாக்கத்திற்கு கண்டனம் வெளியிட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து இலங்கையர்களும் இனம் மத பேதங்களை விடுத்து ஒரே இரத்தம் கொண்டவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.