Designed by Iniyas LTD
இன்று காலை யாழில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது..!
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், சந்தேகத்திற்கிடமாக நடமாடியதால் அவர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.