Designed by Iniyas LTD
இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு..
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தோரில் 36 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் சீனா இந்தியா பங்களாதேஷ் டென்மார்க் ஜப்பான் நெதர்லாந்து போர்த்துக்கல் சவூதிஅரேபியா பிரான்ஸ் துருக்கி பிரிட்டன் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் 11பேர் இந்தியர்கள் என்று, பிரிட்டனை சேர்ந்த 6 பேரும் டெர்மார்கை சேர்ந்த மூவரும் இதில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயங்களுக்குள்ளான 12 வெளிநாட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் , 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறீப்பிடத்தக்கது.