தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிக் கடலட்டை பிடித்த மீனவர்கள் கைது..

யாழ்.வடமராட்சி நாகர் கோவில் கடற்பரப்பில் அத்துமீறிக் கடலட்டை பிடியில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் ஆறுபேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் அதிகாலை கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து  கடலட்டை பிடிப்பதற்குப் பயன்படுத்திய இரு படகுகளையும்  கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

மேலும்  கைதான  மீனவர்கள்  ஐந்துபேர் மன்னார் மாவட்டத்தையும், ஒருவர் மாமுனைப் பகுதியையும் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...