தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம்

228 பயணிகள் மற்றும், 12 பணியாளர்களுடன்  UL 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் நேற்று  மாலை கொச்சி விமான நிலையத்தில்  இடம்பெற்றுள்ளது,

கொச்சி விமான நிலையத்தில் இருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது

அங்கு  நிலவிய காலநிலையின் காரணமாக  இந்த அனர்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டதாகவும், ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

Comments
Loading...