தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விக்ஷம் அருந்திய தந்தை

சாவகச்சேரியில்   இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம்  ஒன்று  பதிவாகியுள்ளது

குறித்த  சம்பவம் நேற்றிரவு    இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் 37 வயதுடைய தந்தை நேற்றிரவு தனது பிள்ளைகளான 10 வயது மகனுக்கும் 7 வயது மகளுக்கும் உணவில் கிருமிநாசியைக் கலந்து கொடுத்து தானும் உட்கொண்டுள்ளார்.

அயலிலுள்ள உறவினர்கள் இதனை,   அறிந்து மூவரையும் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்.  மேலதிக சிகிற்சைக்காக  யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவு

அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு  அவர்களிற்கு  சிகிச்சை  அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது  மூவரினதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக   மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தற்கொலைக்கான  காரணம் என்ன என்பது   வெளிவரவில்லை

Comments
Loading...